ஆர்எஸ்எஸ் அமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் கிருஷ்ணசாமி! விரைவில் கட்சியை கலைக்க திட்டம்...?

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அதிகாரப்பூர்வமாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தென்மாவட்டங்களில் அருந்ததயினர் மக்களுக்காக கட்சி நடத்தி வருபவர் கிருஷ்ணசாமி. கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து எம்எல்ஏ ஆனார். அதன் பிறகு திமுக - அதிமுக கூட்டணியில் மாறி மாறி கிருஷ்ணசாமி இடம்பெற்று வருகிறார். 

கடந்த தேர்தலை பாஜக தலைமையில் கிருஷ்ணசாமி எதிர்கொண்டார். ஆனால் வழக்கம் போல் கிருஷ்ணசாமி தோல்வியை தழுவினார். இந்த நிலையில் தொடர்ந்து அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்தார்.

இதற்கிடையே மராடடிய மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு கிருஷ்ணசாமி சென்று திரும்பியுள்ளார். மேலும் அங்கு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் காரியகர்த்தர்களுக்கான முகாமிலும் கிருஷ்ணசாமி பங்கேற்றுள்ளார். இதனை பெருமையாக அவர் தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருந்த கிருஷ்ணசாமி அந்த அமைப்பில் இணைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. விரைவில் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைய இருப்பதாகவும் கிருஷ்ணசாமி குறித்து தகவல்கள் வருகின்றன.