தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 14 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்துக்கு தமிழக மக்களிடையே, குறிப்பாக கிராமப்புற மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அம்மா மினி கிளினிக் இருக்க அச்சம் எதற்கு... முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆம், இந்த திட்டம் தொடங்கப்பட்ட 25 நாட்களிலேயே சுமார் 10 லட்சம் பேர் சிகிட்சை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சுமார் 850 கிளினிக்குகள்தான் முதல்கட்டமாக திறக்கப்பட்டுள்ளன. 2000 மினி கிளினிக்களும் முழுமையாக திறக்கப்பட்டுவிட்டால், பயனாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகஇருக்கும் என்கிறார் இத்திட்டத்தின் கண்காணிப்பாளராக செயல்படும் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர்.
அம்மா கிளினிக்கில் காய்ச்சல், பிபி, சுகர், மலேரியா, ஹீமோகுளோபின், கர்ப்ப பரிசோதனை என அடிப்படையான மருத்துவ சோதனைகள் நடத்தப்படுகின்றன. உடனடி முதலுதவி சிகிச்சைக்காக உரிய மருந்து மாத்திரைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நோயின் தன்மை பெரிய அளவில் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல பரிந்துரைக்கப்படுகிறது.
அதனால் தேவையில்லாத விஷயங்களுக்காக அநாவசியமாக பல கிலோ மீட்டர் பயணித்து மாவட்ட அல்லது தாலுகா அளவிலான மருத்துவமனைகளுக்குச் செல்லும் சிரமம் குறைந்துவிட்டதாக பொதுமக்கள் சந்தோஷம் அடைகிறார்கள். இப்படியொரு திட்டத்தைக் கொண்டுவந்த எடப்பாடியாருக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவிக்கின்றனர்.
ஏழை எளிய மக்கள் மீது பரிவுள்ள ஒருவர்தான் இதுபோன்று சிந்திக்கவும், திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தவும் முடியும் என எடப்பாடியை வாயாரப் புகழ்கிறார்கள். அம்மா மினி கிளினிக் திட்டத்தை ஏழை எளிய மக்கள்தான் பாராட்டுகிறார்கள் என்றால், இங்கு சிகிச்சை பெற வரும்
திமுகவினருமே இத்திட்டத்தைப் பாராட்டித் தள்ளுகிறார்கள் என்பதுதான் ஆச்சர்யம்.