ஒரு ஓட்டுக்கு ரூ.2000! வசமாக சிக்கிய திமுக எம்எல்ஏவை விரட்டி விரட்டி வெளுத்த நாங்குநேரி மக்கள்!

ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதாக சந்தேகித்து பெரியகுளம் எம்எல்ஏ தாக்கப்பட்ட சம்பவமானது நாங்குநேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. அதற்கு அருகே உள்ள கல்லத்தி கிராமத்தில் வசித்து வரும் மக்கள் தங்களுடைய சமூக பிரிவினை தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்புக்கொடி காண்பித்து தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த கிராமத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக 2 பேர் வந்துள்ளனர். அவர்களை அந்த கிராமத்து மக்கள் அடித்து விரட்டிக் கொண்டிருந்த போது, ஒருவர் மட்டும் அருகிலுள்ள தோப்பு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டுக்குள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரான சரவண குமார் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பொதுமக்களுக்கும் அவருக்கும் இடையே கைக்கலப்புகள் ஏற்பட்டுள்ளன. குமார் இதனை அப்பகுதி காவல்துறையினரிடம் கூறி முறையிட்டுள்ளார்.

பொதுமக்களும் அப்பகுதியின் தேர்தல் அதிகாரிக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த வீட்டிற்குள் 1,392 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்ததுள்ளன. 2 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது நாங்குநேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.