வணிக வளாகத்தில் புகுந்த சைக்கோ! 20 பேரை சுட்டுக்கொன்று வெறியாட்டம்! ரத்தத்தை சில்லிட வைக்கும் கொடூரம்!

அமெரிக்கா நாட்டில் பட்டப்பகலில் வணிக வளாகத்திற்குள் நுழைந்து பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளியே அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.


அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. மாகாணத்திற்கு உட்பட்ட எல் ஃபாசோ என்ற நகரிலே இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள வால்மார்ட் என்னும் வணிகவளாகத்தில் இந்தக் கொடூரத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தாக்குதலில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர். வால்மார்ட் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் மூலமாக கண்டறிந்தனர். பின்னர் அந்த இளைஞர் இந்த மனிதநேயமற்ற தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்பு தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் 4 பக்கத்திற்கு திடுக்கிடும் தகவல்களை பதிவு செய்துள்ளார்.

அதாவது டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பானிய மொழி பேசும் இலத்தீனமெரிக்கர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். இது எனக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்துகின்றது. நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள மசூதியில் நிகழ்ந்த மனிதநேயமற்ற தாக்குதலை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த நாசவேலையை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் இவருடைய அடையாளங்களை இதுவரை வெளியிடவில்லை. இவர் நடத்திய பயங்கர தாக்குதலில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவமானது டெக்சாஸ் மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.