வளமான வாழ்வு தரட்டும் 2021ம் ஆண்டு…! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புத்தாண்டு வாழ்த்து.

உலகத்திற்கே பெரும் சோதனை தரும் ஆண்டாக அமைந்துவிட்ட 2020 விடைபெற்றுச்செல்கிறது. புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அவரது வாழ்த்தில், ‘அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். தமிழக மக்களுக்கு வளமான வாழ்வையும் நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும்.

வளம், வலிமை மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச்செய்திட ஒற்றுமையுடன் உழைத்திடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லோருக்கும் நல்ல ஆண்டாகவே 2021 அமையட்டும்.