லாபம்தான் முக்கியம்! பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு!

பொதுத்துறை வங்கிகள் அரசின் மூலதனத்தை நம்பி‌ காத்திருக்க வேண்டாம். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்.


எதிர்வரும் காலங்களில் அரசின் மூலதனத்தை நம்பி காலத்தை தாழ்த்தாமல். தனியார் வங்கிகளுக்கு இணையாக லாபம் ஈட்டும் யுக்தியை கையாளும்படி கூறியுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.

2018-19 நிதியாண்டில் கடுமையான சரிவை சந்தித்த பொதுத்துறை வங்கிகளை காப்பாற்ற மத்திய அரசின் சார்பில் சுமார் 90 ஆயிரம் கோடி மூலதன உதவி அளிக்க முன் வந்தது. இதே காலகட்டத்தில் ஐடிபிஐ வங்கியைத் தவிர மற்ற தனியார் வங்கிகள் 10% மேல் லாபம் ஈட்டியுள்ளதாகவும். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொதுத்துறை வங்கிகள் கடுமையான நிதிச் சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

மேலும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் பொருளாதார வீழ்ச்சியின் பாதையில் நாடு பயனிப்பதாகவும். ஒரு பக்கம் வேலை வாய்ப்பின்மை.. மற்றொரு பக்கம் வேலைகளில் இருந்து பலர் தொடர்ந்து நீக்கப்பட்டு வருவது. ஆட்டோமொபைல், தொழிற்துறை, உற்பத்தி, ஐடி துறை என்று எல்லாம் ஒருசேர பாதிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது ரிசர்வ் வங்கி.

பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 2017, செப்டம்பர் வரையிலான காலத்தில். 7.34 இலட்சம் கோடியாக உள்ளது. அதே நேரத்தில் தனியார் வங்கிகளின் வராக்கடன்(NPA) அளவானது 1.03 இலட்சம் கோடி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக வங்கிகளில் மொத்த வராக்கடன்கள். சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே 77 விழுக்காடு வசூலிக்க வேண்டியிருக்கிறது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

 பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வராக்கடன் தொகை மட்டுமே 1.86 இலட்சம் கோடியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி 57,630 கோடி, இந்தியன் வங்கி 49,307 கோடி, பேங்க் ஆஃப் பரோடா 46,307 கோடி, கனரா வங்கி 36,164 கோடி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 38,286 கோடி ரூபாய் வராக் கடனில் சிக்கியுள்ளன.

இதற்கிடையே 2018-19ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடிகள் 74 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2018-19 நிதியாண்டில் நாட்டில் நடைபெற்றுள்ள வங்கி மோசடிகளின் மதிப்பு 71 ஆயிரத்து 543 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும்.

இது கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கி மோசடிகளின் மதிப்பைவிட 73.8 சதவிகிதம் அதிகமாகும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அரசு வழங்கவுள்ள மூலதனத்தை நம்பி காத்திருக்க வேண்டாம் எனவும். தனியார் வங்கிளைப் போல புதிய திட்டங்கள் மூலம் லாபம் ஈட்ட தயாராக இருக்கவும் என்று குறிப்பிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

மணியன் கலியமூர்த்தி