விஜயை வைத்து படம் எடுத்து நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் -பார்ட் 4!

விஜய் தயாரிப்பாளர்களை மட்டும் அல்ல தன்னுடன் பி.ஆர்.ஓவாக இருந்தவர் வாழ்விலேயே விளையாடியுள்ளார். அதனை இந்த கட்டுரையை படித்த பிறகு தெரிந்து கொள்ளலாம்.


புலி: இந்த படத்தை எடுத்தவர் நடிகர் விஜயின் பி.ஆர்.ஓவாக இருந்த பி.டி. செல்வகுமார். செல்வகுமாருக்கு நீண்ட நாட்களாக தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதனை விஜயிடம் கூற விஜய் சிம்புதேவனை இயக்குனராக்கி புலி படம் உருவானது. பாகுபலி வெளியாகி வெற்றி பெற்று இருந்த நிலையில், புலிப்படத்தையும் அதே பாணியில் உருவாக்கி வசூலை அள்ளிவிடலாம் என்பது விஜய் – செல்வகுமார் கணக்கு.

  ஆனால் படம் வெளியாகி படு தோல்வி. அதுமட்டும் இல்லாமல் படம் வெளியாகும் சமயத்தில் தலைவா படத்தின் தோல்விக்கு நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் பிரச்சனை, வருமான வரித்துறை சோதனை என  பி.டி செல்வகுமார் பரிதவித்து போனார். வசூலும் இல்லாமல், விநியோகஸ்தர்களும் சட்டையை பிடித்ததால் படம் தயாரிப்பு எனும் ஆசையை விட்டுவிட்டு தற்போது பட விநியோகத்தை செய்து வருகிறார் பி.டி. செல்வகுமார்.

பைரவா! விஜயா புரடக்சன்ஸ் எனும் நிறுவனம் பிரமாண்ட படங்களை எடுத்து பெயர் பெற்றது. தமிழில் விஜயை வைத்து பைரா என்கிற ஒரே ஒரு படம் தான் எடுத்தது இந்த நிறுவனம். அதன் பிறகு படத்தயாரிப்பே வேண்டாம் என்று ஓடிவிட்டது. அந்த அளவிற்கு விஜய் படமான பைரவா பைனான்ஸ் ரீதியாகவும், படப்பிடிப்பு தளங்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும் விஜயா புரடக்சன்ஸ்நிறுவனத்தை கதி கலங்க வைத்துவிட்டது.

மெர்சல்! அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி கோடிகளை குவித்ததாக விளம்பரம் செய்யப்பட்டது. படம் பெரும் வெற்றி, அனைவருக்கும் லாபம் என்றும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் லாபம் சம்பளம் வாங்கி இயக்கிய அட்லிக்கும், நடித்துக் கொடுத்த விஜய்க்கும் மட்டும் தான். படத்திற்கு முதலில் கூறிய செலவை விட அதிக செலவை இழுத்து வைத்தார் அட்லி. இதனால் படம் ஏற்கனவே கூறப்பட்ட விலைக்கு விற்றுத் தள்ளப்பட்டது.இறுதியில் கணக்கு பார்த்த போது பத்து கோடி ரூபாய்க்கு மேல் படத்தாயரிப்பாளர் ஸ்ரீதேனான்டாள் பிலிம்சுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகவும், மெர்சல் படத்தை எடுக்க ஆன செலவுக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் தவித்ததால் தேனான்டாள் பிலிம்ஸ் பூஜை போட்ட சங்கமித்ரா படத்தை தொடங்க கூட முடியாமல் தவித்து வருகிறது.

மெர்சலில் ஏற்பட்ட நஷ்டத்தை போக்க விஜயிடம் மீண்டும் கால்ஷீட் கேட்டது தேனான்டாள் பிலிம்ஸ். அதற்கு  பதில் சர்கார் படத்தின் விநியோக உரிமையை மட்டும் வாங்கி கொடுத்தார் விஜய். ஆனால் சர்காரும் கவிழ்த்துவிட்டதால் விஜயை வைத்து மெர்சல் படம் எடுத்த தயாரிப்பாளர் தேனான்டாள் பிலிம்சின் முரளி தலையில் துண்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறார் தற்போது.   இப்படியாக தன்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் வாழ்வை எல்லாம் சூனியமாக்கிய விஜயை இன்னும் வசூல் மன்னன் என்றும், வசூல் சக்கரவர்த்தி என்றும் அழைப்பது எப்படி நியாயம் ஆகுமோ?


விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் முதல் பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.


விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் 2வது பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.


விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் 3வது பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.