தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அதிகபட்சமாக 4500 ரூபாய் கட்டணம்! மத்திய அரசு அறிவிப்பு!

தனியார் ஆய்வகங்கள் மூலம் கொரானா பரிசோதனை செய்வதற்கு அதிகபட்சமாக 4500 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.


சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது 300க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதன் காரணமாக மத்திய அரசு தனியார் ஆய்வகங்கள் மூலமாக கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு விடுத்திருந்தது.

கொரோனா தொடர்பான பரிசோதனை செய்து கொள்வதற்கு அதிகபட்சமாக 4 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய அரசு என் ஏ பி எல் எனப்படும் ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் தேசிய வாரியத்திடம் ரியல் டைம் பிசிஆர் சோதனை நடத்த ஏற்கனவே அனுமதி பெற்றுள்ள அனைத்து தனியார் ஆய்வாளர்களும் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இரத்த மாதிரிகள் பெறப்பட வேண்டும் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நெறிமுறைகளின் அடிப்படையில் பரிசோதனை செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு தனியார் ஆய்வகங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் விலை குறைவாகவோ அல்லது இலவசமாகவோ பரிசோதனைகளை தனியார் ஆய்வகங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யாரிடமிருந்து ரத்த மாதிரி பரிசோதிக்க படுகின்றன மற்றும் அவரின் பரிசோதனை முடிவுகள் ஆகியவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.