ரூ.11 ஆயிரம் பேலன்ஸ்! 80 வயது முதியவரை கட்டிலோடு கட்டிப் போட்ட பிரைவேட் ஹாஸ்பிடல்..! அதிர்ச்சி தரும் காரணம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் மருத்துவ கட்டணத்தை முழுமையாக செலுத்தாததால் மருத்துவமனை நிர்வாகம் அவரது கை கால்களை கட்டிப்போட்டு துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாஜாப்பூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் தன்னுடைய மருத்துவ கட்டணத்தை முழுமையாக செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதாவது இந்த முதியவருக்கு மருத்துவமனை நிர்வாகம் கட்டணம் செலுத்தும் படி கூறியிருக்கிறது. அதில் முன்னதாக 5ஆயிரம் ரூபாயை அந்த முதியவரின் சார்பில் அவரது மகள் கட்டியிருக்கிறார்.

 மீதமுள்ள மருத்துவமனை கட்டணத்தை தங்களால் கொடுக்க இயலவில்லை என்று அந்த முதியவரின் மகள் கூறியிருக்கிறார். மிஞ்சியிருக்கும் 11000 ரூபாயை கட்ட தவறியதால் முதியவரின் கைகளையும், கால்களையும் கட்டிலோடு கட்டி போட்டு மருத்துவமனை நிர்வாகம் துன்புறுத்தி இருக்கிறது. இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளிவர ஆரம்பித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனைப் பற்றி தெரிந்து அவர் மருத்துவமனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

ஆனால் இதுகுறித்து மருத்துவமனை சார்பில் கூறுகையில், அந்த முதியவருக்கு எக்ஸ்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு இருப்பதால் அங்கிருக்கும் பொருட்களை தூக்கி போட்டு உடைத்து விடுவார் என்ற அச்சத்தினால் தான் மருத்துவமனை நிர்வாகம் அவரது கை , கால்களை கட்டி வைத்து உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு மருத்துவ கட்டணம் தள்ளுபடி செய்யப் பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் மனித உரிமை மீரலை மருத்துவமனை நிர்வாகம் கையாண்டதால் அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.