சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற விரும்புகிறேன்- பிரதமர் மோடி திடீர் முடிவு!

சமூக வலைதள பக்கங்கள் இருந்து தான் வெளியேற விரும்புவதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக ட்விட் செய்துள்ளார்.


பொதுவாகவே பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். எப்பொழுதுமே தன்னுடைய கருத்துக்களையும் தான் விரும்பும் விஷயங்களை பற்றியும் மக்களிடத்தில் சமூக வலைதள பக்கங்களில் மூலம் பகிர்வதை தன் வழக்கமாக கொண்டவர். இத்தகைய ஆர்வம் மிக்க மனிதர் திடீரென்று சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து தான் வெளியேற நினைப்பதாக கூறியுள்ளது அவரை பின்தொடர்வோர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் அதிக மக்கள் தொடர் ஊர்களின் பட்டியலில் நம்முடைய பிரதமரும் ஒருவராக வலம் வருகிறார். இவரை ஃபேஸ்புக்கில் 4.45 கோடி நபர்களும், யூடியூபில் 45 லட்சம் பேரும், ட்விட்டரில் 5.3 கோடி நபர்களும், இன்ஸ்டாகிராமில் 3.3 கோடி நபர்களும் பின் தொடர்ந்து வருகின்றனர். 

 பல கோடி மக்கள் மோடியை சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து வரும் நிலையில் திடீரென்று அவர் பதிவிட்டுள்ள புதிய ட்விட்டர் பதிவு சமூக வலைதள வாசிகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது , அவருடைய ட்விட்டர் பதிவில், "இந்த ஞாயிற்றுக்கிழமை, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறுவதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.