மோடி - அமித் ஷாவை காஞ்சிபுரத்திற்கு அழைக்கும் அத்திவரதர்! ஏற்பாடுகள் முழு வீச்சில் தயார்?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பற்ற அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வர உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகிறது.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் மூலவரான அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நீருக்குள் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இந்த நிகழ்வு ஜுலை 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர், 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார்முதல் நாளில் 1 லட்சம் பக்தர்களூம் இரண்டாம் நாளில் 75 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்த நிலையில் இன்றும் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருக்கின்றனர்.

எனினும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் எந்த வித சிரமும் இன்றி பக்தர்கள் எளிதாகவும் விரைவாகவும் தரிசனம் செய்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் வர உள்ளதாகவும் அதனால் தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் காஞ்சிபுரத்தில் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்கு சென்னையில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை விரைந்தது. இதன்படி ஆயுதம் தாங்கிய கருப்பு உடை போலீஸ் 40 பேர் காஞ்சிக்கு பாதுகாப்புக்காக வருகை தந்துள்ளார்கள். கிழக்கு கோபுரம் பகுதியில் 20 பேரும் மேற்கு கோபுரம் பகுதியில் 20 பேரும் உள்ளனர்

பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தகவல்கள் பரவி உள்ளது.  ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்மாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மோடி இந்த மாதம் சென்னை வருகிறார். அப்போது அவர் காஞ்சிபுரம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.