பாண்டிச்சேரி உங்களை விலை உயர்வோடு வரவேற்கிறது! சரக்கு ரேட்டை அதிரடியாக கூட்டினார் நாசா!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மதுபான விலை உயர்த்தப்பட்டிருக்கும் சம்பவமானது குடிமகன்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.


தமிழக சட்டப்பேரவை சென்ற மாதம் 28-ஆம் தேதி கூடியது. இன்று நடந்த சட்டப்பேரவை நிகழ்ச்சியில், பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மீதான மானிய கோரிக்கை நிகழ்ந்தது.

அப்போது பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான கே.பி.பி சாமி பால் கொள்முதல் செய்வோருக்கு கொள்முதல் விலையை அதிகரித்து தர வேண்டும் என்று கூறினார். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பால் கொள்முதல் செய்வதற்கு விலை அதிகரித்தால் பால் விலையும் அதிகரிக்கும்.

இதற்கு திமுக சம்மதித்தால் நாங்களும் ஒப்புக்கொள்வோம் என்று கூறினார். இதேபோன்று புதுச்சேரியில் நிகழ்ந்த சட்டப்பேரவை நிகழ்ச்சியில், மதுபானத்தின் விலையை உயர்த்த திட்டமிட்டனர். அதாவது, வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் மதுபானங்களானது தமிழகத்தைவிட புதுச்சேரியில் 50 சதவீதம் குறைவாக விற்கப்படுகிறது.

மதுபானத்தின் விலையை உயர்த்தினால் அரசின் வருவாயை உயர்த்த இயலும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மதுபானத்தின் விலை உயர்த்தப்பட உள்ள நிலையில் குடிமகன்கள் அனைவரும் பதற்றத்தில் உள்ளனர்.