தனக்கு திருமணம் ஆன பிறகும் தன்னுடன் பிரகதி தகாத உறவை தொடர்ந்ததாகவும், அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகவும் இதற்கு பணம், நகை கொடுத்ததாகவும் கூறி அதிர வைத்துள்ளான் சதீஷ்.
உல்லாசமாக இருக்க நகை கேட்டு தொந்தரவு செய்தாள்! பிரகதி கொலையாளியின் திடுக் வாக்குமூலம்!
பிரகதி மாயமான உடனேயே அவரது பெற்றோர் சதீஷ் தான் இதற்கு காரணம் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் சதீஷை தேடியுள்ளனர். ஆனால் சதீஷ் தம் மனைவி குழந்தையுடன் கோவை காட்டூர் காவல் நிலையத்திற்கு வந்து தனக்கும் பிரகதி மாயமானதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
காவல் நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்த சதீஸை நல்லவன் என்று நம்பி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பிரகதியின் உடலுக்கு அருகே கிடந்த அவரது செல்போனை ஆய்வு செய்த போது தான் அவர் கடைசியாக சதீஷிடம் பேசியது தெரியவந்தது. விசாரணையின்போது சதீஷ் இந்த தகவலை மறைத்த காரணத்தினால் அவரை மீண்டும் விசாரணைக்கு இழுத்து வந்தனர் போலீஸ்.
அப்போது போலீசார் கேள்விகளை கேட்க ஆரம்பிப்பதற்கு முன்னரே தான்தான் பிரகதியை கொலை செய்ததாக கூறி அதிர வைத்துள்ளார் சதீஷ். இதற்காக அவன் கூறிய காரணங்கள் போலீசாரை மட்டுமல்ல அனைத்து தரப்பினருமே திடுக்கிட வைத்தது. காவல் நிலையத்தில் சதீஷ் கூறியுள்ள வாக்குமூலம் என்று கூறப்படுவது; நான் கல்லூரியில் படிக்கும் காலம் முதலே எனக்கு பிரகதி மீது காதல் இருந்தது. பிரகதி எனக்கு அத்தை பெண் என்பதால் உரிமையுடன் சென்று அப்போது பெண் கேட்டோம்.
ஆனால் பிரகதிக்கு அப்போது வயது பதினைந்து மட்டுமே என்பதால் அவரது பெற்றோர் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். இதனையடுத்தே எனது பெற்றோர் எனக்கு கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்தனர். இதனால் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு நான் கேரளாவில் சென்று வட்டித் தொழில் செய்து வருகிறேன். எனக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பிறகும் கூட நானும் பிரகதியும் எங்களது தகாத உறவை தொடர்ந்து வந்தோம். பிரகதி கோவையில் படித்த காரணத்தினால் நான் கேரளாவில் இருந்த காரணத்தினால் வாரத்திற்கு ஒருமுறை அவரை சந்தித்து இருவரும் உல்லாசமாக இருப்போம். இதற்காக பிரகதிக்கு ஏராளமாக பணம் மற்றும் நகைகளை கொடுத்துள்ளேன். இந்த நிலையில் நாட்டு துரை என்பவருடன் பிரகதிக்கு திருமணம் செய்ய இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து பிரகதியிடம் கேட்ட போது அவனை திருமணம் செய்தாலும் உன்னுடன் என்னுடைய பழக்கம் தொடரும் என்று கூறினாள்.
இருந்தாலும் எனக்கு பிரகதி மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் தனது திருமணத்திற்கு வேண்டும் என்று 10 சவரன் நகையும் சிறிது பணமும் என்னிடம் பிரகதி கேட்டாள். அதை கொடுப்பதாகக் கூறி தான் கடந்த சனிக்கிழமை அன்று பிரகதியை கல்லூரியிலிருந்து எனது காரில் அழைத்துச் சென்றேன். காரிலேயே நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது பிரகதி பணம் கேட்டு என்னைத் தொந்தரவு செய்தாள்.
ஏற்கனவே வேறு ஒருவனுக்கு பிரகதி மனைவியாகப் போவதை அறிந்து நான் எரிச்சலில் இருந்தேன். இந்த நிலையில் அவள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கத்தியால் குத்தி கொடூரமாக கொலைசெய்து சாக்கு மூட்டையில் அவளது உடலைத் வைத்து சாலையி வீசி விட்டுச் சென்று விட்டேன். இவ்வாறு நெஞ்சை உறைய வைக்கும் வகையில் சதீஷ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.