குறைபிரசவம் தடுக்கும் ஆன்டினடல் ஸ்டீராய்டு

37 வாரங்களுக்கு உள்ளாக பிறக்கும் குழந்தைகளின் உடல் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது என்பதால் உயிர் பிழைப்பது கடினமாகிறது. இதனை தடுப்பதற்கு ஆன்டினடல் ஸ்டீராய்டு பயன்படுகிறது.


·         குறை பிரசவத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் கர்ப்பிணிகளுக்கு நிச்சயம் தனி கவனிப்பு கொடுக்கப்பட வேண்டும்.

·         24 வாரம் முதல் 34 வாரத்திற்குள் கர்ப்பிணிக்கு ஆன்டினடல் ஸ்டீராய்டு கொடுப்பது கரு தொடர்ந்து வளர்வதற்கு உதவுகிறது.

·         பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஒரு முறை மட்டும் ஆன்டினடல் ஸ்டீராய்டு கொடுப்பது போதுமானதாக இருக்கிறது.

·         முதல் குழந்தை குறை பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்க்கு கண்டிப்பாக இந்த சிகிச்சை தேவைப்படும்.

குறை பிரசவத்திற்கான வாய்ப்பு எதுவும் தென்படாதபட்சத்தில், கர்ப்பிணிக்கு இந்த சிகிச்சை தேவைப்படுவதில்லை. ஆனாலும் முழு கர்ப்ப காலமும் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் முழுமையான கவனிப்பு அவசியமாகும்.