கேப்டனுக்கு ஹேர்கட், ஷேவிங் மட்டும் அல்ல கால் நகங்களையும் வெட்டி விட்ட பிரேமலதா..! நெகிழவைக்கும் கணவன்-மனைவி வீடியோ உள்ளே!

கேப்டன் விஜயகாந்துக்கு அவரது மனைவி பிரேமலதா ஹேர்கட், ஷேவிங் மற்றும் கால் நகங்களை வெட்டி விட்டு அழகு பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் மருந்தகங்கள், மளிகை கடைகள் போன்றவை மட்டுமே இயங்கி வருகிறது. சலூன் கடை இயங்காத காரணத்தினால் பலர் தங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு தாங்களே ஹேர் கட் செய்து விடுகிறார்கள். அந்த வகையில் தேமுதிக தலைவர் கேப்டனுக்கு அவரது மனைவி பிரேமலதா ஹேர்கட், ஷேவிங் செய்துவிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் கேப்டனின் மனைவி பிரேமலதா கேப்டனுக்கு முதலில் ஹேர்கட் செய்கிறார். ஹேர்கட் செய்து முடித்த பின்பு கேப்டனுக்கு அவர் ஷேவிங் செய்து விடுகிறார். பின்னர் கேப்டனுக்கு ஹேர் டையும் அடித்துவிட்டு பின்னர் கை கால்களில் உள்ள நகங்களை பொறுமையாக வெட்டி விடுகிறார். கேப்டனுக்கு ஹேர்கட் செய்யும் போது அவரது மனைவி பிரேமலதா கூறுகையில் வழக்கமாக கேப்டனுக்கு ஒருவர் முடிதிருத்தம் செய்வார். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நானே அவருக்கு ஹேர்கட் செய்து வருகிறேன். மேலும் நான் அவருக்கு ஹேர் கட் செய்வது புதிதல்ல. அமெரிக்காவில் இருக்கும்போது நான் தான் அவருக்கு ஹேர்கட் செய்து விடுவேன் எனவும் அவர் கூறினார்.

பின்னர் கால்களின் நகங்களை கட் செய்துவிட்டு கேப்டனின் காலுக்கு க்ரீம் போடும்போது  காலில் உள்ள தழும்புகளை சுட்டிக்காட்டி இதெல்லாம் என் கணவரின் வீரத் தழும்புகள் எனவும் இதெல்லாம் ஒவ்வொரு படத்தின் சண்டைக்காட்சி யின் போது ஏற்பட்டவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உள்ளது எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹேர்கட், சேவிங் மற்றும் நகங்களை வெட்டிய பிறகு அந்த வீடியோவின் முடிவில் கேப்டன் விஜயகாந்த் அவரே அவரது தலைமுடியை வாரி அழகாக சிரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.