பிரசவ வலி! துடிதுடித்த ரம்யா கிருஷ்ணன்! குழந்தை பிறந்த பிறகு ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சி சம்பவம்!

விருதுநகர் மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ரம்யா கிருஷ்ணா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் மதுரையில் உள்ள முத்துப்பட்டி எனும் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பிரசவத்திற்காக குன்னூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் ரம்யா கிருஷ்ணாவிற்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியே எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

இதனையடுத்து வீட்டாரின் ஒப்புதலுடன் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. பின்னர் அங்கிருந்த மருத்துவர்கள் ரம்யா கிருஷ்ணா விற்கு செய்து அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலிருந்த பெண் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். குழந்தை பிறந்த ஒரு சில வினாடிகளிலேயே ரம்யா கிருஷ்ணாவிற்கு வலிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

இதனையடுத்து மருத்துவர்கள் ரம்யா கிருஷ்ணாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ரம்யா கிருஷ்ணா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் ரம்யா கிருஷ்ணாவின் உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியம் தான் இவரது உயிரிழப்புக்கு காரணம் என்று மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இதனைப்பற்றி மருத்துவர்களிடம் கேட்ட பொழுது ரம்யா கிருஷ்ணா விற்கு முறையான மருத்துவ சிகிச்சை தாங்கள் வழங்கியதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.