ஓடும் ரயிலில் கழிவறைக்குள் சென்ற கர்ப்பிணி..! கையில் குழந்தையுடன் வந்த சம்பவம்! திருத்தணியில் நடந்தது என்ன?

கேரளாவிலிருந்து சொந்த ஊரான பீகாருக்கு சிறப்பு ரயிலில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவமானது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.


பீகாரை சேர்ந்தவர் முபாரக் கான். இவருடைய மனைவியின் பெயர் ரேஷ்மா. இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பெயிண்டிங் வேலைக்காக கேரளா மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தனர். சென்ற ஆண்டு ரேஷ்மா மீண்டும் கர்ப்பமானார். 

கொரோனா வைரஸ் போர் அடங்கினாள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல இயலாமலும், அப்பகுதியில் வேலையில்லாமலும் மிகவும் தவித்து வந்தனர். பின்னர் மாநிலங்களுக்கு இடையே அனுப்பப்படும் சிறப்பு ரயிலில் பீகாருக்கு செல்ல முடிவெடுத்தனர்.

ரயிலில் சென்று கொண்டிருந்தபோது திருத்தணி அருகே ரேஷ்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர், ரயில்வே மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரேஷ்மா ஒரு வழியாக ஓடும் ரயிலிலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் ரயில் திருத்தணி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவமானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.