குடும்பத்தகராறு காரணமாக கர்ப்பிணி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் ஒன்றரை வயது குழந்தை..! வயிற்றில் 5 மாத சிசு..! 22 வயது புவனேஸ்வரி செய்த பகீர் செயல்..! அதிர்ச்சி காரணம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியின் வயது 32. சத்தியமூர்த்தி தாம்பரத்தில் சொந்தமாக ஒரு மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் புவனேஸ்வரி. புவனேஸ்வரியின் வயது 22.
இத்தம்பதியினருக்கு 1.5 வயதில் சிவரஞ்சனி என்ற மகளுள்ளார். தற்போது புவனேஸ்வரி மீண்டும் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். கடந்த இரு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்குதலினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சத்தியமூர்த்தியால் தன்னுடைய கடையை திறக்க இயலவில்லை. மேலும் மாமியார்-மருமகள் இடையேயான சண்டையும் அதிகரித்த வண்ணம் இருந்தன
ஆதலால் அவர் சமீபகாலமாக விவசாயம் செய்துவந்தார். இந்நிலையில் புவனேஷ்வரிக்கும், சத்தியமூர்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. மேலும் மாமியார் மருமகள் இடையேயான சண்டைகளும் அதிகரித்த வண்ணம் இருந்தன.
இதனால் நேற்று காலை முதல் புவனேஸ்வரி மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். நேற்றிரவு தனியாக இருந்த போது மன அழுத்தம் அதிகமான காரணத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன் மனைவி சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ந்த சத்தியமூர்த்தி சோமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் புவனேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புவனேஸ்வரியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆகிய நிலையில் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.