தகுதியில்லாத மருத்துவச்சிகள் பிரசவம் பார்த்ததில் குழந்தையின் கால்கள் முறிந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிய எடுக்கும் போது கால் முறிஞ்சிடிச்சி..! பிரசவத்தின் போது டாக்டர்களால் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட பயங்கரம்!

ரஷ்யா நாட்டில் வோரொனெஜ் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு தம்பதியினருக்கு வீட்டிலேயே குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு செல்லாமல், பிரசவத்தில் கைதேர்ந்தவர்கள் என்று எண்ணி 2 மருத்துவச்சிகளை வீட்டிற்கு அழைத்துள்ளனர். அவர்களின் பெயர் வலேரியா மற்றும் எகடெரினா என்பனவாகும். 2 சேரும் கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிற்கு சென்று பிரசவ முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது எதிர்பாராவிதமாக குழந்தையின் கால்கள் வெளியே தெரிந்துள்ளன. இதனால் இருவரும் மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். நடக்கும் சம்பவங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்க முயற்சி செய்துள்ளார். தங்கள் மீதுள்ள தவறு தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் மருத்துவச்சிகள் ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
உடனடியாக காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றனர். மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னரே மருத்துவர்கள் குழந்தையை பத்திரமாக வெளியே எடுத்தனர். குழந்தையின் கால்களில் முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "நன்கு படித்தவர்களாக இருந்தும் பிரசவத்திற்கு மருத்துவச்சிகள் ஏற்பாடு செய்தது மிகப்பெரிய தவறு" என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.