பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! ஆம்புலன்சிலேயே நடந்த பிரசவம்! தாய் - சேயை காப்பாற்றி நெகிழ வைத்த 108 ஊழியர்கள்!

108 ஆம்புலன்ஸிலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து சம்பவமானது செந்துறையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செந்துறையில் கக்கன் காலனி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு முருகேசன் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி‌. இவருடைய மனைவியின் பெயர் புவனேஸ்வரி. புவனேஸ்வரியின் வயது 27. இத்தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

3-வது முறையாக புவனேஸ்வரி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த அவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறையிலிருந்து திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது சிலுவத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது புவனேஸ்வரிக்கு 108 ஆம்புலன்ஸிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் உதவியாளரான பன்னீர்செல்வமும், ஆம்புலன்ஸை ஓட்டி வந்த கருணை மற்றும் ஸ்டீபன் ஆகியோர் குழந்தையை பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

குழந்தையும், தாயும் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் மருத்துவர்கள் இருவரையும் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்த சம்பவமானது செந்துறையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.