ஒன்வேயில் அதிவேகம்! திடீரென குறுக்கே வந்த பைக்..! கோர விபத்தில் நிறைமாத கர்ப்பிணி, கணவன், குழந்தை துடிதுடித்து பலி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

அம்பாசமுத்திரம் அருகே கார்-பைக் விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அகஸ்தியர்பட்டியில் இருந்து காரில் முக்கூடல் எனும் ஊருக்கு சென்றுள்ளார். அதே நேரத்தில் பாப்பாகுடி குமாரசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த மாதவன் துரை என்பவர் முக்கூடலில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்து நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியையும், ஐந்து வயது மகனையும் பைக்கில் ஏற்றிக் கொண்டு தனது சொந்த ஊரான குமாரசாமியாபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் இந்த இரு வாகனங்களும் கடையம் சாலையில் உள்ள அரிராம்நகர் விலக்கில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த மாதவன் துரை மற்றும் அவரது 5 வயது மகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பைக்கில் அவர்களுடன் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணியான மாதவன் துரையின் மனைவி உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்சில் அருகிலிருந்த அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்த அந்த நிறைமாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை செய்யப்படும் போது அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.