தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது சமீரா ரெட்டியுடன் இணைந்து படம் எடுப்பதற்காக காத்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்ப்பமாக இருக்கும் அந்த நடிகை தான் வேண்டும்! சீனியர் நடிகரின் விபரீத ஆசை!
நந்தமுரி பாலகிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார். தற்போது இவர் பிரபல இயக்குனரான கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் புது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்திற்கு ஹீரோயினாக சமீரா ரெட்டி நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.
சமீபத்தில் சமீரா ரெட்டியை பத்திரிக்கையாளர்கள் சந்தித்த போது, "தான் தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் தெலுங்கு திரையுலகிற்கு வருவேன் என்று கூறியுள்ளார்".
தற்போது சமீரா ரெட்டி கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆறு மாத காலம் ஆகும். அதுவரை நந்தமுரி பாலகிருஷ்ணா காத்திருப்பாரா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
மேலும் படக்குழுவினர், ரகுல் பிரீத் சிங், தமன்னா பாட்டியா ஆகிய முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக வலம் வருகிறார்.
ஊழல் செய்த அரசியல்வாதிகளை கைது செய்வது அவருக்கு இந்த படத்தில் தொழில் என்று நெருங்கியவர்கள் கூறியுள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சமீரா ரெட்டி கர்ப்பமாக இருந்தாலும் பரவாயில்லை அவர் தான் தன்னுடன் இந்த படத்தில் ஜோடியாக நடிக்க வேண்டும் தமன்னாவும் வேண்டாம் ரகுல் ப்ரீத் சிங்கும் வேண்டாம் என்று பாலகிருஷ்ணா அடம் பிடித்து வருகிறாராம்.