தாயே கொரோனா வரக்கூடாது..! ஊர் மக்களை காக்க தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்திய இளைஞன்! பகீர் சம்பவம்!

கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக அம்மனுக்கு இளைஞர் தன்னுடைய 40 காணிக்கையாக செலுத்திய சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,65,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 24,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் 16,316 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 2,302 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 519 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதிலும் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. சொந்த மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு மாநிலங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் பனாஸ்கந்தா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பவானி அம்மன் கோவிலில் சிற்பங்கள் செதுக்கும் அதற்காக வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுள் ஒருவர் மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவேக். நேற்று முன்தினம் விவேக் உன்னுடைய நண்பர்களுடன் இணைந்து நாதேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு சென்ற இவர் நாக்கு அறுபட்ட நிலையில் கிடந்ததைக் கண்ட கோவில் பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் விவேக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது இந்த வைரஸ் தாக்குதல் சீக்கிரம் முற்றிலுமாக ஒழிய வேண்டும் என்று அம்மனிடம் பிரார்த்தனை செய்ததாகவும், அதற்கு காணிக்கையாக தன்னுடைய நாக்கை கொடுப்பதாக வேண்டி கொண்டதாகவும் கூறினார். ஆதலால் விவேக் தன்னுடைய நாக்கை அறுத்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவமானது கோவிலின் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.