என் கணவனை நயன்தாரா அபகரித்தது எப்படி? பிரபு தேவாவின் முன்னாள் மனைவி ரமலத் வெளியிட்ட பகீர் தகவல்!

பிரபல நடன இயக்குனர், நடிகர் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் நடிகை நயன்தாராவை பற்றி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது. அந்த இடத்திலிருந்து காதல் வெளியேறிவிடும். நம்பமுடியாத ஒருவருடன் நம் வாழ்க்கையை வாழ்வதைவிட, தனியாக வாழ்வதே சிறந்தது என்று நான் முடிவு செய்ததால் தான் கடந்த கால காதல் உறவுகளை நான் முறித்துக் கொண்டேன் என்று நடிகை நயன்தாரா கூறியிருந்தார்.

இந்நிலையில் நடன இயக்குனர் பிரபுதேவா அவர்களின் முன்னாள் மனைவி ரமலத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அந்தப் பேட்டியில் அவர் ,எனது கணவர் பிரபுதேவா நடிகை நயன்தாராவை காதலிக்கிறார் என்பதை என்னால் அப்போது நம்பவே முடியவில்லை. ஆனால் இப்போது அவர் மாறிவிட்டார். பிரபுதேவா மிகவும் நேர்மையான கணவர். கடந்த 15 ஆண்டுகளாக எங்களை மிகவும் நன்றாக கவனித்து வருகிறார். எங்களுக்கென்று தனியாக ஒரு வீடு வாங்கி கொடுத்துள்ளார். 

நடிகை நயன்தாராவை பற்றி பேசிய பிரபுதேவாவின் மனைவி ரமலத், எனது கணவர் பிரபுதேவாவை நயன்தாரா திருடி விட்டார். அடுத்தவரின் கணவரை திருடுபவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். நயன்தாரா ஒரு தவறான பெண். அவரை நான் எங்கேயாவது பார்த்தால் கண்டிப்பாக அவரை நான் அடிப்பேன் எனவும் அதிரடியாக பிரபுதேவாவின் முன்னால் மனைவி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.