நான் சம்மதிக்கணும்ணா..? அதை பத்தி மட்டும் பேசுங்க! தயாரிப்பாளர்களுக்கு சீனியர் நம்பர் நடிகை சொல்லும் சங்கதி!

சினிமா துறையில் சீனியர் நடிகையாக வலம் வரும் அவர் கதையைப் பற்றி எல்லாம் பேச வேண்டாம், படத்தில் என்னுடைய சம்பளம் பற்றி மட்டும் பேசுவோம் என்று கூறியதால் தயாரிப்பாளர்கள் அச்சத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அந்த சீனியர் நடிகை. சினிமாவில் கால் பதித்த சில காலத்திலேயே முன்னணி கதாநாயகர்களுடன் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். இதனையடுத்து சரியான பட வாய்ப்புகள் அமையாததால் சினிமா துறையை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் ஒருவர் பிரபல நம்பர் நடிகையை திரைப்படமொன்றில் கமிட் செய்து இருந்தார். அதற்குள் பிரபல சீனியர் நடிகையின் மகன் இந்தத் திரைப்படத்திற்கு வருவதற்காக கதையை மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குனர். இதனால் காண்டான நம்பர் நடிகை தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கிடைக்காததால் இந்த படத்தை விட்டு விலகுவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

இதனை நினைத்து இயக்குனர் இதே கதையை வைத்து பல ஹீரோயின்களிடம் ஒப்பந்தத்திற்கு அலையோ அலைனு அலைந்திருக்கிறார். இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த அந்த சீனியர் நடிகை தயாரிப்பாளரிடம் எக்கச்சக்க பணத்தை சம்பளமாக கேட்டிருக்கிறார். இதனால் வாய் பிளந்து போன தயாரிப்பாளர் என்ன செய்யறது ஹீரோயின் கிடைச்சா போதும் என்று அந்த சீனியர் ஹீரோயினை புக் செய்து இருக்கிறார்.

இதனைஅடுத்து அந்த சீனியர் நடிகையிடம் கதை சொல்ல போன இயக்குனரிடம் கதையெல்லாம் எனக்கு வேண்டாம். முதல்ல ஹீரோ யாரு ? படத்தில் எனக்கு எவ்வளவு சம்பளம் ? அதை மட்டும் சொல்லுங்கள் போதும் மத்தது எல்லாம் எனக்கு வேணாம் என்று நடிகை திட்டவட்டமாக கூறிவிட்டாராம். 

இதைக் கேட்ட இயக்குனர் அசந்துபோய் செய்வதறியாமல் திகைத்து இருக்கிறார். சீரியல் இவ்வளவு கறாராக பணத்தை கேட்கிறார் என்று எல்லோரும் குழம்பியுள்ளனர். அப்போதான் தெரியவந்துள்ளது சீனியர் நடிகையின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம்.

ஏற்கனவே நடிகையோட தங்கச்சிக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு. இந்நிலையில் சீனியர் நடிகைக்கும் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று வரன் தேடி வருகிறார்களாம். ஆகையால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் திருமணமாகி செட்டில் ஆக இருப்பதால் தன்னால் முடிந்தவரை பணத்தை சம்பாதித்து தரவேண்டுமென சீனியர் நடிகை எண்ணுவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.