பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி! தனிமைப்படுத்தப்பட்டதால் பீதியில் ரசிகர்கள்!

நியூசிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசானுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.


ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மைதானத்தில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் நடந்து முடிந்தது. ரசிகர்கள் கூடினால் தான் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் ரசிகர்கள் இந்த போட்டிக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு எதிர்மறையாக போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசானுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகியது . இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

ஒருவேளை இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகிவிட்டால் இந்த போட்டியில் பங்குபெற்ற அனைத்து வீரர்களுக்கும் இது பரவி இருக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதால் இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.