உங்கள் பாலியல் தேவை பூர்த்தி! உங்களுக்கு 30வினாடி இன்பம்! இதுவா என் வேலை? பிரபல நடிகை கேட்ட கேள்வி..!

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் அபர்ணா நாயர் தன்னை வர்ணித்து வக்கிரமாக கமெண்ட் அளித்த நெட்டிசனை சாடி தக்க பதிலளித்திருக்கிறார்.


மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த அபர்ணா நாயர், தமிழில் நடிகர் கார்த்திக் குமாருடன் இணைந்து எதுவும் நடக்கும் என்ற படத்தில் நடித்திருந்தார். ரன் பேபி ரன், மல்லு சிங், கல்கி ஹோட்டல் கலிபோர்னியா ஒன்று மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினார் நடிகை அபர்ணா நாயர். பொதுவாகவே நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பழக்கங்களை உடையவர்களாவர். அந்த வகையில் நடிகை அபர்ணாவும் அப்படித்தான் எப்பொழுதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பழக்கம் கொண்டவர் ஆவார்.

பொதுவாகவே நடிகைகள் ஏதேனும் பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டால், அதனை ஒரு தரப்பினர் வரவேற்பதும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பதும் மட்டுமல்லாமல் ஒரு சிலர் ஆபாசமாகவும் கமெண்ட் அடிப்பதை தங்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் நடிகை அபர்ணா நாயர் வெளியிட்ட பதிவு ஒன்றுக்கு வக்கிரமாக கமெண்ட் அளித்திருக்கிறார். இதனைப் பார்த்த நடிகை அபர்ணா, அதை அப்படியே விட்டு விட்டு கடந்து போகாமல் அந்த நெட்டிசனை கண்டபடி விளாசி இருக்கிறார்.

அதாவது நடிகை அபர்ணா நாயர் கூறியிருப்பதாவது, நெட்டிசன் ஒருவர் அளித்த கமெண்ட்டை பார்த்து கடுப்பான அபர்ணா நாயர், அந்த நெட்டிசனன் பெயரை டேக் செய்து இதனை நான் என்னுடைய நலம் விரும்பிகள் உடன் உரையாடுவதற்கான தலமாக பயன்படுத்திக் கொள்கிறேன். உங்களைப் போன்ற மோசமான கருத்துக்களை பதிவிட்டு உங்களது காம உணர்வுகளையும் கற்பனையையும் பூர்த்தி செய்வதற்கான இடம் இது கிடையாது. இதுபோன்ற அருவருப்பான செயல்களை சகித்துக் கொள் வதற்காக நான் இங்கு இல்லை. மேலும் அந்த வக்கிரமான கமெண்ட் அளித்த நெட்டிசனின் புகைப்படத்தில் அவர் தன்னுடைய மக்களுடன் இணைந்து போஸ் அளித்திருக்கிறார்..

நடிகை அபர்ணா அதனைக் குறிப்பிட்டு, உங்கள் புகைப்படத்தில் நீங்கள் உங்களது மகளை கட்டிப்பிடித்து போஸ் அளித்திருக்கிறீர்கள். அதே போல் நானும் வேறு ஒருவரின் மகள் ஆவேன் . இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பாக இதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் எனது பணியை விளம்பரப்படுத்த இங்கு இருக்கிறேனே தவிர உங்களுக்கு 30 வினாடி சந்தோஷத்தை அளிப்பதற்காக அல்ல என்று நடிகை அபர்ணா நாயர் அந்த நெட்டிசனை கடுமையாக சாடியுள்ளார். நடிகையின் இந்த தக்க பதிலடியை பார்த்த பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது நடிகை அபர்ணாவின் இந்த பதிலடி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.