இவரால் மட்டுமே டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க முடியும்! பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கணிப்பு!

இந்திய வீரர்களில் இவரால் மட்டுமே டி20 போட்டியில் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.


ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒரு காலகட்டத்தில் இரட்டை சதம் அடிப்பது மிகப்பெரிய விஷயமாக இருந்தது. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் முதன்முறையாக இரட்டை சதமடித்து சாதனை படைத்தார். அதன்பின்பு சேவாக், ரோஹித் சர்மா மற்றும் சிலர் இரட்டை சதம் அடித்தனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 264 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ளார்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கப்போகும் வீரர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவால் மட்டுமே டி20 போட்டியில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது என அவர் கூறியிருந்தார்.

 அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் எல்லா பக்கங்களிலும் சிக்ஸர்களை விளாசி கூடிய திறமையான ஆட்டக்காரரான ரோகித் சர்மா சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் மற்றும் தரமான டைமிங் ஷாட்டுகளை ஆடக் கூடியவர் எனவும் அவர் ரோகித் ஷர்மா பற்றி புகழ்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.