பட வாய்ப்புகள் இல்லை..! அட்ஜெஸ்ட்மென்டுக்கு ரெடி..! தயாரிப்பாளர்களுக்கு தூது விடும் வளர்ந்த நடிகை!

படவாய்ப்புகள் குறைந்து உள்ளதால் சம்பளத்தை குறைத்து அட்ஜெஸ்ட்மென்டுக்கு ரெடி என வளர்ந்த உயரமான நடிகை அறிவிப்பு வெளியிட்டு தயாரிப்பாளர்களை குஷிப்படுத்தி இருக்கிறாராம்.


நல்ல வளர்ந்த உயரமான நடிகை தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுவதில் வல்லவர். தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட ஒரு சில கசப்பான அனுபவத்தால் கோலிவுட்டே தனக்கு வேண்டாம் என ஒதுங்கியிருக்கும் அவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த வளர்ந்த நடிகையின் மார்க்கெட் குறைவதற்கு காரணமே தமிழ் சினிமாவில் அவர் நடித்த ஒரு படம்தான். அதாவது அவர் நடித்த ஒரு படத்திற்காக தன் உடலை தாறுமாறாக ஏற்றினார். அதற்குப் பின்பு உடலை குறைக்க அவர் பலவித முயற்சிகளை கையாண்டு கடைசியில் அது தோல்வியில் முடிந்தது.

இதனால்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் மளமளவென குறைய ஆரம்பித்தது. இதனுடைய தாக்கம் தெலுங்கு சினிமாவிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது. பின்னர் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் இவரை ஆண்டி என கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.

இதனால் காண்டான அந்த நடிகை மிகவும் சிரமப்பட்டு தன் உடல் எடையைக் குறைத்து கட்டுக்கோப்பான உடலை பெற்றார். இருப்பினும் அவருக்கு சரியான படவாய்ப்புகள் இன்னமும் அமையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இன்னிலையில் தன்னுடைய பட வாய்ப்புகளை அதிகரிக்க புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது நல்ல பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக தன்னுடைய அதிகபட்சமான சம்பளத்தை குறைத்து இருக்கிறாராம் இந்த வளர்ந்த நடிகை. இதன் மூலம் தயாரிப்பாளர்கள் பலரும் தன்னை தங்களது படத்தில் நடிக்க வைப்பார்கள் என இந்த நடிகை கணக்குப்போட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அம்மனிக்கு வயது கூடிக் கொண்டே போவதால் அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வரன் தேடி வருவதாகவும் தகவல்கள் உலாவி வருகிறது.

எது எப்படியோ இந்த வளர்ந்த நடிகையை மீண்டும் நாம் தமிழ் சினிமாவில் கூடியவிரைவில் பார்ப்போம் என ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.