மாமியார் வீட்டில் குடைசல்..! கண்டு கொள்ளாத கணவன்..! விவாகரத்தை நோக்கி சமத்து நடிகை!

சமத்து நடிகையின் கணவர் வீட்டாருடன் தொடர்ச்சியாக பிரச்சினை ஏற்பட்டு வருவதால் அவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அந்த சமத்து நடிகை. இருமொழிகளிலும் சமமாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்து நடிப்பதில் வல்லவராக வலம் வருகிறார். இந்த சமத்து நடிகை முதலில் விவாகரத்தான நடிகரை காதலித்து வந்தார்.

பின்னர் என்ன காரணமோ இருவரும் பிரிந்து விட்டனர். அவரை கழட்டி விட்டு பின்னர் சமத்து நடிகை தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒருவரை காதலிக்க ஆரம்பித்தார். பின்னர் இருவரும் அவர்களது காதலைப்பற்றி இரு வீட்டாரிடம் கூறி திருமணத்திற்கு ஒப்புதல் பெற்றனர்.

இவர்களது திருமணம் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. எப்பொழுதுமே சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இவர். ஆனால் கடந்த சில நாட்களாகவே இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆளையே காணோம். என்னதான் ஆச்சு இவருக்கு என்று இவருடைய ரசிகர்கள் தேடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது கணவரின் தம்பிக்கு பிறந்தநாள். எப்பொழுதுமே குடும்பத்தினருக்கு பிறந்தநாள் என்றால் முதலில் வாழ்த்து செய்தியை சமூக வலைதளத்தில் பதிவு இடுபவர் இவர்தான். ஆனால் இந்த முறை தன்னுடைய மைத்துனருக்கு எந்த வாழ்த்து செய்தியும் பகிர்ந்து கொள்ளாதது ஏன் எனவும் ரசிகர்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதற்குப் பின்புதான் இவருக்கும் இவரது கணவர் வீட்டாருக்கும் இடையில் ஏதோ பிரச்சினை நிலவி வருவது தெரியவந்தது. இந்தப் பிரச்சினையால் இந்த சமத்து நடிகை தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.