கழட்டிவிட்ட கணவன்..! போதைக்கு அடிமையான நடுத்தர வயது நடிகை..! மதிமயங்கும் வரை புகை! மட்டையாகும் வரை குடி..!

கணவனை விட்டு பிரிந்த அந்த நடுத்தர வயது நடிகை போதைக்கு அடிமையாகி மட்டை ஆகும்வரை குடித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


பொதுவாகவே சினிமா நடிகைகள் படத்தில் வரும் ஒரு சில காட்சிகளுக்காக குடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். நாளடைவில் அந்த பழக்கம் அவர்களுக்கு வேகமாக தொற்றிக்கொள்கிறது. இதனால் அவர்கள் போதைக்கு அடிமையாகி மட்டை ஆகும்வரை குடிக்கும் பழக்கத்திற்கு தள்ளி விடப்படுகின்றனர்.

அந்த வகையில் நடுத்தர வயது நடிகை ஒருவர் பிரபல இயக்குனர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரை திருமணம் செய்த பின்பும் குடியும் குடித்தனமாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனை அடுத்து வந்த இயக்குனர் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். ஆனால் இந்த நடிகை இன்னும் என்ன காரணமோ தெரியவில்லை குடியும் குடித்தனமாக தனியாக வாழ்ந்து வருகிறார். அக்கா , அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவருடைய கேரவனுக்குள் நுழைந்தாலே ஒரே புகை மண்டலமாக காட்சி தரும் என்கிறார்கள் அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள். அதுமட்டுமில்லாமல் மட்டை ஆகும்வரை குடிக்கும் பழக்கத்தை உடையவராக இந்த நடிகை கூறப்படுகிறார். இப்பொழுது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அம்மணிக்கு மது கிடைக்காத விரக்தியில் சோகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மது போதைப் பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக இந்த நடிகை யோகாசனம் மற்றும் பல வித முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவும் முடிவதற்குள் விரைவில் இந்த நடிகையை புதுப் பரிமாணத்தில் பார்க்க இயலும் என அவருடைய நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.