நான் அவர கழட்டிவிட்டு பல மாசம் ஆச்சு..! கல்யாணம் குறித்து விசாரித்தவர்களுக்கு காதலில் விழுந்த நடிகை கொடுத்த ஷாக்! கோடம்பாக்கம் கிசுகிசு!

தமிழ் சினிமாவில் நடித்த பிரபலமான ஹீரோ ஹீரோயின் அவர்களின் காதல் எப்போதோ முறிந்து விட்டது என கூறப்பட்ட நிலையில் மீண்டும் அதைப்பற்றி கிசுகிசுக்கப்படுவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அந்த கதாநாயகி. நடித்த முதல் படமே நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடித்து அதன் மூலமாக ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். 

தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்‌. கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படத்தில் நடித்த நடிகருடன் இணைந்து மீண்டும் இரண்டாவது திரைப்படத்தையும் நடித்திருந்தார் அந்த நடிகை. 

இரண்டு முறையும் ஒரே ஹீரோவுடன் நடித்து இருந்தமையால் அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்தார் அந்த கதாநாயகி. இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

சினிமா பக்கமே வராமல் இருந்த அந்த கதாநாயகி திடீரென சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் கவரப்பட்டது. இதன் மூலம் அந்த நடிகைக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமாத்துறையில் பிசியாக நடித்து வரும் இந்த நடிகை மீண்டும் அவருடைய பழைய ஹீரோவுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். கண்ணனின் மறு பெயரை தன்னுடைய பெயராக கொண்டிருக்கும் அந்த நடிகருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் இந்த பிரபல நடிகை. இருவரும் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது மீண்டும் கிசுகிசுக்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடிகையும் அந்த ஹீரோவும் ஒன்றாக படத்தில் நடித்த பொழுது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்போது அவர்கள் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இவர்கள் ஏன் கிசுகிசுக்க படுகிறார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.