ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி ஆண்டுதோறும் கொடுக்கபடும் பொங்கல் பரிசு தொகுப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து தற்போது வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக மக்களுக்கு வரும் ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_16905_1_medium_thumb.jpg)
தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றிகரமாக இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் கடந்த நவம்பர் 29ஆம் தேதி துவங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு அளிக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது இரு கட்டங்களாக வெற்றிகரமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று உள்ளதால் மீண்டும் இந்த பரிசுத்தொகை வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் ஜனவரி 9 துவங்கி ஜனவரி 12ல் முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதுமுள்ள 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த பொங்கல் பரிசு வழங்கப்படவேண்டும் . இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பச்சரிசி , பருப்பு, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, இரண்டு அடிக்கரும்பு மற்றும் 1000 ரூபாய் ஆகியவை மக்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த நவம்பர் 29ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் விதிமுறைகளை மீற கூடாது என்பதற்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் உரிய ஆவணங்கள் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆகவே உரிய குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு நிலுவையில் உள்ள பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.