பொண்டாட்டிகளை தூக்கிக் கொண்டு நடு ரோட்டில் ஓடிய கணவன்கள்..! தென்காசி பரபரப்பு! ஏன் தெரியுமா?

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மனைவியை கணவன் தூக்கிக்கொண்டு ஓடும் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரசிகாமணி என்ற கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போட்டியில் மனைவியை கணவன் தூக்கிக்கொண்டு ஓடும் வித்தியாசமான விளையாட்டுப் போட்டி ஒன்று நடைபெற்றது. தார்ச்சாலையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் கணவர்கள் தங்களது மனைவியுடன் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் சிலர் தங்களது மனைவியை குழந்தைகள் போல கையில் தூக்கி கொண்டனர். சில தங்களது மனைவியை உப்பு மூட்டை போல முதுகில் ஏற்றிக் கொண்டனர். போட்டி ஆரம்பித்தவுடன் கணவன்மார்கள் தங்களது மனைவியை தூக்கிக் கொண்டு வேகமாக ஓட முயற்சித்தனர். குழந்தையைப் போல தங்களது மனைவியை கையில் தூக்கிக் கொண்டு சென்ற மூன்று கணவன்கள் பொத்தென்று தனது தங்களது மனைவி கீழே போட்டு அவர்களும் விழுந்தனர்.

முதுகில் உப்பு மூட்டை போல ஏற்றிக்கொண்டு சென்ற இரட்டை கணவன் மனைவிகள் மட்டும் வெற்றிகரமாக ஓடி எல்லைக் கோட்டை கடந்து முடித்தனர். குழந்தையை போல மனைவியைத் தூக்கிக் கொண்டு வரும் போது மூன்று கணவன்மார்கள் தங்களது மனைவியை கீழே பொத்தென்று போட்டதும் அங்கே கூடியிருந்த ரசிகர்கள் நீண்ட நாள் ஆசையை கணவர்கள் நிறைவேற்றிக் கொண்டனர் என்று கிண்டலடித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.