இந்தச் செடியால் மருத்துவ பலன்கள் மட்டுமல்ல, அதிர்ஷ்டமும் நம்மை தேடி வருமாம்!!!

நம்முடைய மண்ணில் வளர்ந்து நிற்கும் ஒவ்வொரு செடி, கொடி, மரத்திற்கும் ஒவ்வொரு அற்புதத் தன்மை இருக்கத்தான் செய்கிறது.


சில மரம், செடிகளின் மகிமையை நாம் அறிகின்றோம். சில செடிகளின் மகிமைகளை நம்மால் அறிய முடியவில்லை. எத்தனையோ அதிசய மரம், செடி கொடிகள் நம் பூமியில் இருந்தாலும், அதில் சில மரம், செடிகளின் மகத்துவங்களையும், மகிமைகளையுமா நாம் அறிந்திருக்கின்றோம் என்றால் அது நம்முடைய பாக்கியம் தான். இப்படிப்பட்ட மகிமைகளை கொண்ட ஒரு செடிதான் மாதுளை செடி. மாதுளையில் அதிகப்படியான மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்தது. மாதுளை பழத்தின் மூலம் நாம் ஆரோக்கியத்தை பெறமுடியும். இந்த மாதுளை செடியால் நமக்கு அதிர்ஷ்டத்தை தர முடியுமா? என்ற கேள்விக்கான பதிலைத்தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

இந்த பரிகாரத்தை மாதம் ஒரு முறை செய்வதன்மூலம் நமக்கு இருக்கும் தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையக்கூடும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தொழில் முன்னேற்றமும், பணவரவும், நம்மை தேடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பலவகைப்பட்ட நன்மையை தரும் மாதுளை செடியை வைத்து நாம் பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

மாதுளை செடியானது சுவாதி நட்சத்திரத்திற்கு உரியதாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இதனால் மாதம்தோறும் வரும் சுவாதி நட்சத்திரத்தன்று மாதுளைசெடிக்கு முன்பு, வெற்றிலை பாக்கு படையல் வைத்து மனதார நம் வேண்டுதலை சொல்லி, அந்த செடியை மூன்று முறை சுற்றி வர வேண்டும். செடியின் வடக்கு திசை, கிழக்கு திசை நோக்கி வளர்ந்திருக்கும் கிளைகளின் குச்சியை சின்னதாக உடைத்து, நம் வீட்டிற்கு எடுத்துவந்து, நம் வீட்டு பூஜை அறையிலும் வைத்துக்கொள்ளலாம். அல்லது சிறிய தாயத்தின் உள்ளே போட்டு, நம் கழுத்திலும் கட்டிக் கொள்ளலாம். அல்லது நாம் உபயோகப்படுத்தும் பர்ஸ்ஸிலும் அந்த சின்ன குச்சியை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்து குச்சியை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவேண்டும்.

மாதம்தோறும் வரும் சுவாதி நட்சத்திரத்தன்று, மாதுளை செடிக்கு வெற்றிலை பாக்கு வைத்து, மூன்று முறை சுற்றி வந்து மறுபடியும் குச்சியை உடைத்து கொண்டு வந்து புதியதாக மாற்றிக்கொள்ள வேண்டும். மாதம்தோறும் குச்சியை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். இது ஒரு சிறிய பரிகாரம் தான். செடியின் குச்சியை நீங்கள் உடைக்கும்போது உங்கள் மனதார, உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இடம் இருப்பவர்கள் வீட்டிலேயே மாதுளை செடியை வளர்த்து வரலாம். வீட்டின் கிழக்குப் பக்கம், வடக்கு பக்கம் இந்த செடியை வளர்ப்பது நல்ல பலனைத் தரும். இதுமட்டுமல்லாமல் மகாலட்சுமி வழிபாட்டிற்கும், விஷ்ணு வழிபாட்டிற்கும் மாதுளைப்பழம் மிகவும் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று ஹனுமனுக்கு மாதுளை பழம் படைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.