பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் தன் பெயரை இழுத்துவிட்டது ஸ்டாலின் மருமகன் தான் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பெண்கள் ஆபாச வீடியோ மேட்டர்! ஸ்டாலின் மருமகன் மீது பரபரப்பு புகார்!
பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பலுடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது.
திமுக தூண்டலின் பெயரில் என் மீது கலங்கம் கற்பிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது நான் தான். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியில் என் மீது கலங்கம் விளைவிக்க திமுக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இதற்கு காரணமே ஸ்டாலின் மருமகன் சபரீசன் தான்.இது திமுக விற்கு கைவந்தக்கலை. என் சுற்று வட்டார மக்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். பாதிக்கப்பட்டவர்களும் இது குறித்து கூற தயாராக உள்ளனர். திமுக பிரமுகர் தென்றல் மகனிற்கும் முதல் குற்றவாளிக்கும் நல்ல நட்பு உள்ளது.
காவல்துறை இது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். கைது செய்யப்படுவதற்கு முன்பு ஸ்டாலின் தான் காப்பாற்ற வேண்டும் என்று குற்றவாளி கூறியுள்ளார்.அதற்கான ஆதரம் என்னிடம் உள்ளது. என்னை பற்றி சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியவர்கள் மீது அவதூறு வழக்கு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்று நானே புகார் அளிக்கப்போகிறேன். இதுக்குறித்து அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். யானை யானை தான்..பூனை பூனை தான். எங்களுக்கு உண்டான பலம் யானை பலம். தேர்தலை மையமாக கொண்டு திமுக நடத்திய பொய் பிரச்சாரம் தான் இது
இது ஸ்டாலின் மருமகன் சபரீசன் வேலை, குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று கேட்டதே நான் தான். இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.