கல்லூரி மாணவிகள் கொள்ளையனால் கற்பழிக்கப்பட்ட சம்பவமானது தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை வல்லம் பைபாஸ்..! தனிமையில் இருக்கும் காதலர்கள் தான் டார்கெட்! மிரட்டி இச்சையை தீர்த்த கொள்ளை கும்பல்!
தஞ்சை மாவட்டத்திலுள்ள வல்லம் என்னும் பகுதியில் நிறைய கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணமுள்ளன. காவல்துறையினர் தனிக்குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் தனிக்குழு அமைத்து அப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் அதிக நேரம் உலாவி கொண்டிருந்த நபரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த நபர் முன்பின் முரணாக பேசியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது மனோஜிபட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2 வருடங்களாக பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த கும்பலின் தலைவன் என்பதும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணையில் ஈடுபட்டபோது இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்லூரி மாணவ மாணவிகள் உல்லாசமாக இருப்பதற்காக அந்தப் பகுதிக்கு அவ்வப்போது வந்துள்ளதாகவும், ரமேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் குடித்துவிட்டு அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவமானது தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.