மதுரையை கலக்கும் ஸ்வைப்பிங் மிசின் விபச்சாரம்! ஆயுதர்வேதிக் சிகிச்சை மையத்தில் சிக்கிய பெண்கள் - புரோக்கர்கள்!

மதுரையில் பிரபல மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்தபோது 6 பெண்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மதுரையில் பிரபல மசாஜ் சென்டர்கள், ஆயுர்வேத கிளினிக்கள், ஸ்பாக்கள் ஆகிய இடங்களில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணமிருந்தன. மதுரையில் உள்ள காளவாசல் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

மதுரை நகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தனிக்குழு அமைத்து அந்த இடத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பின்னர் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். 

சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து நேற்று இங்கு ரெய்டு நடத்தப்பட்டது.அக்கம் பக்கத்தினர் உடன் விசாரித்தபோது வெளிமாநில பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் கட்டாயமாக ஈடுபடுத்துவதாக கூறினர்.  உள்ளே நுழைந்து பார்த்தபோது கேரளா மற்றும் சென்னையை சேர்ந்த பெண்களை வைத்து விபசாரம் நடத்தப்படுவதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். 

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான கார்த்திக் முருகன், கேரளாவை சேர்ந்த ஸ்ரீரவன், காயத்ரி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்ற விபச்சாரம் அருகிலிருக்கும் மற்றொரு மசாஜ் சென்டரிலும் நடப்பதாக தகவல்கள் கசிந்தன. இதனை உறுதி செய்த காவல்துறையினர் மசாஜ் சென்டரின் உரிமையாளர்களான இமானுவல்,திவ்யா உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது காளவாசல் பகுதியில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.