எல்லை மீறிய காதல் ஜோடி! கண்டித்து இளம் பெண்ணை காப்பாற்றிய காவலர்! ஆனால் அதன் பிறகு நேர்ந்த விபரீதம்!

காதல் ஜோடியை கண்டித்து வீட்டுக்கு அனுப்பிய காவல்துறையினர் மீது கொலை மிரட்டல் புகார் விடுக்கப்பட்டுள்ள சம்பவமானது பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பந்தப்பட்டுள்ள இளைஞன் பழனியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இப்பள்ளியில் தாராபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் நன்கு காதலித்து வந்தனர்.

பழனியில் இடும்பன் மலைகோவில் அமைந்துள்ளது. நேற்று காலை இருவரும் ஜோடியாக கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் பூவழகன் என்ற 49 வயதான காவல் துறை அதிகாரி இருவரையும் விசாரித்துள்ளார். பின்னர், மாணவனை ஓரங்கட்டி மிரட்டியுள்ளார். அங்கிருந்த தன் 2 நண்பர்களுடன் மாணவியை அனுப்பியுள்ளார்.

மாணவி சென்ற சிறிது நேரத்தில் மாணவனை அனுப்பியுள்ளார். மாணவன் பழனி அடிவாரத்திலுள்ள காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். காவல்துறையினர் பூவழகனையும், அவருடைய நண்பர்களான சோலைராஜ் மற்றும் மனோஜையும் விசாரித்தனர்.

அந்தப் பெண்ணை பற்றி கேட்டபோது அவர் சொந்த ஊருக்கு பேருந்தில் அனுப்பிவைத்விட்ட்டோம் என்று கூறினர். அந்த பெண்ணின் வீட்டிற்கு தொடர்பு கொண்டபோது, பெண் வீடு வந்து சேர்ந்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.

இருப்பினும் மூவர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவாகியுள்ளதால், அடிவாரம் காவல்துறையினர் மூவரையும் நன்கு விசாரித்து வருகின்றனர். காதலனுடன் நெருக்கமாக இருந்த மாணவியை காப்பாற்றி அனுப்பி வைத்தவர்களுக்கா இந்த நிலை. இந்த சம்பவமானது பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.