சின்ன வயசுலயே ஹார்ட் அட்டாக்..! குழந்தையுடன் தவித்த மனைவி..! ரூ.12 லட்சம் கொடுத்து உதவி நெகிழ வைத்த முன்பின் தெரியாதவர்கள்!

இறந்துபோன சக காவல்துறை அதிகாரியின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பல காவலர்கள் நிதி திரட்டியுள்ள செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் புதுக்கோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் அருண்காந்தி. இவர் சென்னை மாநகர காவலராக பணியாற்றி வந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த இவர் பணிச்சுமை காரணமாக ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதியன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அருண் காந்தியின் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மையானவர்கள். இவர் பணிக்கு செல்ல தொடங்கியதிலிருந்து தான் சற்று நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் அருண்காந்தியின் மரணம் அவருடைய குடும்பத்தை உலுக்கியது‌. இவருடைய பெற்றோர் விவசாயம் தொழில் புரிந்து வந்தனர். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் காந்தி மரணம் அடைந்ததால் அவருடைய குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். 

இதனை அறிந்துக்கொண்ட அவருடன் பணியில் சேர்ந்துக்கொண்ட 250 காவலர்கள் அருண்காந்தியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவருடைய முகம் கூட பார்க்காத பலரும் 6 லட்சம் ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட் செய்துள்ளனர். மேலும் 6 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கின்றனர். 

மேலும் காவல்துறையினர் ஒன்றுதிரண்டு செய்த இந்த உதவிக்கு அருண்பாண்டியன் உறவினர்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர். அரசு சார்பிலும் நிச்சயமாக அருண்காந்தி குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

காவல்துறையின் இந்த உதவியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.