புதுச்சேரியில் உறவினர்கள் கைவிட்ட முதியவர் ஒருவரை காப்பாற்றி உணவு வாங்கிக் கொடுத்து அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்த காவலரை பாராட்டி பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
கைவிட்ட உறவினர்கள்! சாலையோரம் பசியால் மயங்கிய முதியவர்! யாரும் எதிர்பாராததை செய்து நெகிழ வைத்த போலீஸ்காரர்!

புதுச்சேரியில் உருளையன்பேட்டை என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் மோகன். இவர் பணியில் இருந்த பொழுது அண்ணா நகர் பகுதியில் முதியவர் ஒருவர் உறவினர்களால் கைவிடப்பட்டு உணவு கூட இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்திருக்கிறார்.
அசையக் கூட முடியாத நிலையில் இருந்தால் நம் முதியவரை அங்கிருந்து பத்திரமாக மீட்டு உணவு வாங்கிக் கொடுத்திருக்கிறார் மோகன். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சைகளையும் வழங்கியிருக்கிறார். மேலும் அந்த முதியவரை அருகில் இருந்த முதியோர் இல்லத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார் அந்த காவல் அதிகாரி.
காவல் அதிகாரி மோகன் செய்த இந்த செயல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. பார்த்த சமூக வலைதள வாசிகள் அவரை பெருமையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.