சென்னையில் தள்ளுவண்டி கடையை சின்னா பின்னமாக்கிய போலீஸ்காரர்! காக்கி யூனிபார்மில் அப்பாவியை பழி தீர்த்த கொடுமை!

தள்ளுவண்டி கடையை தாக்கியதாக காவல்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் பெரியமேடு என்னும் பகுதி உள்ளது. பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் சிவராஜன்  ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்பகுதியிலுள்ள அப்துல் ரஹ்மான் என்பவரின் தள்ளுவண்டியை அவர் சேதப்படுத்தியதாக கூறி காங்கிரஸ் கமிட்டி சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் நீதிபதிகள் வழங்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தனர். கேமரா பதிவுகளில் சிவராஜன் அப்துல்ரகுமானின் தள்ளு வண்டியை சேதப்படுத்தியது தெளிவாக தெரிந்தது. உடனடியாக நீதிபதிகள் சிவராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு பெரியமேடு காவல்துறையினரிடம் உத்தரவிட்டார்.

உத்தரவை ஏற்றுக்கொண்ட பெரியமேடு காவல்துறையினர் சிவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பெரியமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.