பூட்டியிருந்த வீடு..! உள்ளே இருந்து தாங்க முடியாத நாற்றம்..! சிதைந்து கிடந்த 5 பெண்களின் சடலம்..! நேரில் பார்த்த அதிர்ந்த உறவுகள்!

உத்திரபிரதேச மாநிலத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரது சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் ஃபதேபூர் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அமைந்திருக்கும் சாந்திபூர் பகுதியில், வசித்துவரும் ஒருவரது வீட்டில் இருந்து கடந்த 4 நாட்களாக துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் இந்த துர்நாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த வீடு கடந்த 4 நாட்களாகவே பூட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பூட்டப்பட்டு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து தான் அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர் அப்போது 5 பேரது உடல் அழுகிய நிலையில் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. போலீசார் வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீசார் இறந்தவர்கள் குறித்த விசாரணையை மேற்கொண்டனர் விசாரணையின்போது இறந்தவர்களின் பெயர்கள் சியாமா மற்றும் அவர்களுடைய நான்கு மகள்கள் என தெரியவந்தது. அதாவது வருஷா , பிங்கி , பிரியங்கா , வாங்கி ஆகிய நான்கு மகள்களுடன் சியாமா தன்னுடைய வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அடுத்து காவல் அதிகாரிகள் ஷியாமாவின் கணவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் விசாரணையின் போது அவரது கணவருக்கும் இடையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது ஐந்து பேரின் இறப்பிற்கு இந்த சண்டை கூட காரணமாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர் அதுமட்டுமில்லாமல் ஷியாமாவின் கணவருக்கு மது அருந்தும் பழக்கமும் உள்ளதாக அங்கிருந்த மக்கள் கூறியுள்ளனர்.