காவி வேட்டி..! கையில் விலங்கு..! போலீசாரால் இழுத்துவரப்பட்ட நாகர்கோவில் காசி..! எல்லாம் பெண்களை பெத்தவர்களின் சாபம்!

பள்ளி சிறுமிகள் முதல் இளம் பெண்கள் வரை 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோக்களையும் புகைப்படங்களையும் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த காசியை, போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் தங்கப்பாண்டியன். இவர் அந்தப் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பெயர் காசி. கல்லூரி படிப்பை முடித்த காசிக்கு வேலை ஏதும் சரியாக அமையாததால் தன்னுடைய தந்தையின் கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். பார்ப்பதற்கு அமைதியான சாதுவான பிள்ளையாக காட்சியளிக்கும் காசி மிகப்பெரிய காமக்கொடூரன் என்பது தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோக்களையும் புகைப்படங்களை எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களை தன்னுடைய இச்சைக்குப் பயன்படுத்தி இருக்கிறார் காசி. அதுமட்டுமில்லாமல் அவர்களை மிரட்டி பணத்தையும் பறித்து இருக்கிறார். இவ்வாறாக காசி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காசியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் காசியை இன்றைய தினம் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 3 நாட்கள் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளனர். போலீசார் தரப்பில் இருந்து பத்து நாட்கள் விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் மூன்று நாட்கள் அவர்களுக்கு விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது இந்த குறிப்பிடத்தக்கது. முன்னதாக போலீசார் காசியின் கோழிப்பண்ணையில் இருந்து அவரது லேப்டாப்பை கைப்பற்றி உள்ள நிலையில் அதன் மூலம் இந்த வழக்குக்கு சம்பந்தப்பட்ட பல தகவல்கள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.