முதல் திருமணத்தை மறைத்து வனிதாவுடன் கல்யாணம்! பீட்டர் பால் மீது FIR..! கைது..?

பீட்டர் பால் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறி அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் அளித்த புகாரின் அடிப்படையில் வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.


நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை அன்று நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து இருக்கிறார். இந்நிலையில் பீட்டர் பாலிரன் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடமிருந்து முறையாக விவாகரத்து பெறாமலேயே நடிகை வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டிருப்பதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதிலும் இந்த புகாரானது கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உறவினரான பீட்டரை, எலிசபெத்திற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மகனும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். பீட்டர் பால் பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டதாகவும் அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார் எனவும் அவரது மனைவி கூறியிருக்கிறார். இதனாலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை எழுந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்தப் பிரச்சினையால்தான் இருவருக்கும் இடையில் கடந்த நான்கு வருடமாக அதிக இடைவெளி ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இருப்பினும் அவ்வப்போது வந்து தன்னுடைய குழந்தைகளுக்கு தேவையானதை பீட்டர் பால் செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய கணவர் நடிகை வனிதாவை திருமணம் செய்து கொள்வதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சி அளித்ததாகவும் என்னிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது சட்டப்படி குற்றம் எனவும் அவர் கூறியிருக்கிறார். ஆகையால் முதல் திருமணத்தை மறைத்து நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் மீது வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.