தண்டவாளத்தில் தடுமாறிய 3 இளம் பெண்கள்! நொடிப் பொழுதில் போலீஸ்காரர் செய்த அதிசயம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

டெல்லியில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த தம்பதியையும் குழந்தையையும் அதிவேக ரயிலில் இருந்து கத்த ரயில்வே காவலர் தான் தப்பிக்க அவகாசமின்றி உயிர் இழந்தார்.


ஹரியானாவைச் சேர்ந்த 51 வயது ஜக்பிர் சிங் ராணா டெல்லியை அடுத்த ஆசாத்பூர் ரயில்நிலையத்தில் பணி புரிந்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ரயில் வருவது கூட தெரியாமல் ஒரு தம்பதி தண்டவாளத்தில் நின்று குடும்பத் தகராறில் ஈடுபட்டிருந்ததாகவும் குழந்தையும் தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துகொண்டிருக்க ஜக்பீர் சிங் ராணா உட்பட ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் கத்தியும் கையசைத்தும் அந்த அறிவீலித் தம்பதிகளுக்கு தங்கள் சண்டைதான் முக்கியமாக இருந்ததே தவிர எதிர்கொண்டு வரும் அபாயத்தை அவர்கள் உணரவில்லை.

இதையடுத்து வேகமாக செயல்பட்ட ராணா அந்தத் தம்பதிகளின் அருகில் சென்று அவர்களை வெளியேதள்ளிவிட்டதுடன் அந்தக் குழந்தையை தண்டவாளத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூற குழந்தையும் புரிந்துகொண்டு வெளியே சென்றது. ஆனால் அதற்குல் ரயில் நெருங்கிவிட ராணா தான் தப்பிக்க அவகாசமின்றி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.