கன்னியாகுமரியை கலக்கும் சொகுசு கார் விபச்சாரம்! வசமாக சிக்கிய பீட்டர் மார்டின்!

சொகுசு காருக்குள் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கன்னியாகுமரி உலகம் முழுவதும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு எப்பொழுதும் நிறைய சொகுசு கார்கள் வருவது வழக்கமாகும். அதேபோன்று "ஜீரோ பாயிண்ட்" என்ற பகுதியில் எப்பொழுதும் போல சொகுசு கார்கள் வந்துள்ளன. அந்த காரில் 2 இளைஞர்கள் ஒரு இளம் பெண்ணுடன் இருந்துள்ளனர். 

அந்த வழியே இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். காரில் இருந்த இளைஞர்கள் அவரை அழைத்து, பணம் கொடுத்தால் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். பயந்துபோன அந்த இளைஞர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார்ளித்துள்ளார். 

காவல்துறையினர் அந்த சொகுசு காரில் விரைந்து கண்டுபிடித்தனர். காரிலிருந்த 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் வள்ளியூரை சேர்ந்த பீட்டர் மார்டின் மற்றும் செங்குளத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவராவர். 

இருவரையும் விபச்சார வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்‌. பாதிக்கப்பட்ட பெண்ணை நாகர்கோவிலில் உள்ள மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.

விபச்சாரத்திற்காக பயன்படுத்திய சொகுசு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவமானது கன்னியாகுமரி "ஜீரோ பாயின்ட்டில்" பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.