முதலில் பேச்சு..! பிறகு படுக்கை..! தொடர்ந்து வீடியோ! 182 பெண்களை வீழ்த்திய 2 தொழில் அதிபர்கள்! எப்படி தெரியுமா?

அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என்று கூறி 182 பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


பிரபல ஹோட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினர் அனிஷ் லோகரூகா மற்றும் பரம்பர ஆடைகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் அவரது நண்பர் ஆதித்யா அகர்வால் ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு முதல் பாலியல் தொடர்புடைய வீடியோக்களை பதிவு செய்து அவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களிடம் நன்றாக பேசும் பெண்களிடம் நெருக்கமாக பேசிப் பழகி படுக்கைக்கு கொண்டு சென்று அவர்களது அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்து விடுவார்கள். வீடியோ எடுத்த பிறகு அந்த பெண்களுடன் உறவை முறித்துக்கொண்டு பின்னர் அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதுபோன்ற 182 பெண்களிடம் அவர்களது அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்து அவர்களிடமிருந்து பணம் பறிப்பது ஏதுவாக செய்து வந்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் கொல்கத்தா சைபர் குற்றவியல் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இந்த மாதம் பத்தாம் தேதி வீடியோ எடுத்து பணம் பறிக்கும் செயலுக்கு உடந்தையாக இருந்த கைலாஷ் யாதவ் என்பவரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்த கைலாஷ் யாதவை கைது செய்து விசாரித்த பிறகு பின்னர் இந்த சம்பவத்திற்கு மூலகாரணமான அனிஷ் லோகரூகா மற்றும் ஆதித்யா அகர்வால் ஆகியோரை மேற்கு வங்கத்தில் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த வீடியோக்கள் அடங்கிய லேப்டாப் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.