மாமியாரை தேடி வந்தவருக்கு மருமகளுடன் தகாத உறவு..! பார்வையை பறிகொடுத்த பரிதாபம்! திருவண்ணாமலை திகிலில் புதிய திருப்பம்!

கள்ளக்காதல் விவகாரத்தில் கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி மற்றும் வருவாய் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிக்கால் உண்ணாமலை நகர் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபால். இவர் அப்பகுதியில் "க்யூ" பிரிவு காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அப்பகுதிக்கு அருகே உள்ள தென்றல் நகர் என்னும் இடத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திறப்பாடு என்னும் கிராமத்தில் கிராம அலுவலராக பணியாற்றி வருகிறார். ஸ்ரீ பாலின் மாமியார் ஆன விமலா வெறையூரில் வருவாய் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

இதனிடையே பணி நிமித்தமாக சிவகுமார் விமலாவின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீபாலின் மனைவிக்கும், சிவக்குமாருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்து கொண்ட விமலா இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார்.

ஆனாலும் இருவரும் திருந்தாமல் தங்களுடைய கள்ளக்காதல் உறவை தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரமானது ஸ்ரீபாலுக்கும் தெரியவந்துள்ளது. இதனிடையே அவர் நேற்று இரவு சிவகுமாரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது இருவரும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குவாதம் முற்றிய போது ஸ்ரீபால் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை சிவகுமாரின் மீது வீசியுள்ளார். 

இதில் சிவகுமாருக்கு சற்று காயங்கள் ஏற்பட்டது. மேலும் ஆசிட் வீச்சை தடுக்க முயன்றபோது  சிதறியதில் ஸ்ரீபாலுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் மேல்சிகிச்சைக்காக இருவரையும் சென்னை கே எம் சி மருத்துவமனை மாற்றியுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கிழக்கு திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.