தஞ்சாவூரில் வடமாநில இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் கொடுமையால் பாலியல் தொழில் செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அரசியல் தலைவர்களின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு விபச்சார அழகிகள் போட்டோஸ்.! பரபரப்பாகும் தஞ்சை பாலியல் தொழில் வழக்கு!

செந்தில்குமார் மற்றும் ராஜம் தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சாவூரில் பாலியல் தொழில் செய்து வந்தனர். சில போலீசார்கள் இதற்கு உதவி வந்ததால் இந்த தொழிலில் இவர்கள் தனி ராஜாங்கமே நடத்தி வந்தனர். இந்நிலையில் தஞ்சாவூரில் வடமாநில இளம்பெண் ஒருவரை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி பாலியல் தொழிலில் இந்த கும்பல் ஈடுபடுத்தி இருந்துள்ளனர். இந்த வடமாநில பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையால் செந்தில்குமார், ராஜம் , சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ் ஐ பிரபாகரன்உள்ளிட்ட 5 பேர் அடங்கிய கும்பலை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அத்துடன் அந்த பாலியல் கும்பலுக்கு சொந்தமான 4 கார்கள் , 3 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள் மற்றும் ஒரு டைரியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பாலியல் கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் நம்பர்கள் உள்ளன. இதில் தஞ்சாவூரை சேர்ந்த பல முக்கிய விஐபிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் உள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ராஜத்தின் செல்போனில் இருந்து தஞ்சாவூரை சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கு இளம் பெண்களின் போட்டோக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கான முழு விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன என போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. ராஜத்துடன் தொடர்புடைய அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட வடமாநில இளம்பெண் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பெற்று வந்த சிகிச்சை முடிந்ததால் அரசுக்கு சொந்தமான ஹோம் ஒன்றில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.